சுந்தர்-சத்யராஜ் நடிக்கும் 'குரு சிஷ்யன்'!

ராஜாதி ராஜா என்ற தலைப்பில் லாரன்ஸை வைத்து படமெடுத்து, பலவித விளம்பர உத்திகளுடன் சுமாராக ஒடவைத்துவிட்ட ஷக்தி சிதம்பரத்திடம் இப்போது சிக்கிக் கொண்டிருப்பது குருசிஷ்யன் தலைப்பு.
இந்தத் தலைப்பில் அப்படியே ரஜினியின் பழைய சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம் ஷக்தி சிதம்பரம்.
இதில் சத்யராஜ் மற்றும் சுந்தர் சி நடிப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் வேடத்தில் சத்யராஜ் நடிப்பாராம்.
பிரபு நடித்த பாத்திரத்தில் சுந்தர் சி நடிப்பார் என்கிறார்கள். ஷக்தி சிதம்பரம் டைரக்டு செய்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார் ஷக்தி சிதம்பரம்.
More from Filmibeat
குருசிஷ்யன் சத்யராஜ் சினிமா சுந்தர் சி தமிழ் ரஜினி ரீமேக் cinema guru sishyan prabhu rajini shakthi chidambaram


Click it and Unblock the Notifications











