twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொழுதுபோக்குத் துறையில் சிறந்த இந்தியர் விருதை வென்றார் ஷங்கர்!

    By Chakra
    |

    Shankar with Rajinikanth
    ரஜினி நடித்த எந்திரன் படத்தை உருவாக்கியதற்காக பொழுதுபோக்குத் துறையில் 2010-ம் ஆண்டிற்கான சிஎன்என் ஐபிஎன் சிறந்த இந்தியர் விருதினை வென்றுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

    அரசியல், சினிமா, சமூகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த நிபுணர்களைத் தேர்ந்தெடுத்து சிறந்த இந்தியர் என்ற விருதினைக் கொடுத்து கவுரவித்து வருகிறது சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி.

    இந்தாண்டு பொழுதுபோக்குப் பிரிவில் ரஜினிகாந்த், அமீர்கான், இயக்குநர் ஷங்கர், சல்மான்கான், விக்ரமாதித்ய மோட்வானி மற்றும் ஷில்லாங் சேம்பர் காயர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். மக்களின் எஸ்எம்எஸ் வாக்குகள் மற்றும் நடுவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் பொழுதுபோக்குப் பிரிவில் எந்திரன் இயக்குநர் ஷங்கர் சிறந்த இந்தியராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    English summary
    Shankar, the director of Super Star Rajini starrer Enthiran has adjudged CNN Ibn"s Indian of the year 2010. The viewers of the channel selected him for this prestigious award through a SMS based poll.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X