வாலிபன்...சிம்புவுடன் கைகோர்க்கும் பிசி. ஸ்ரீராம்!

By Staff

PC Sriram
விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு, முன்னணி டெக்னீஷியன்களுடன் கைகோர்ப்பதில் குறியாக இருக்கிறார் சிம்பு.

இப்போது, தான் இயக்கும் வாலிபன் படத்துக்கான வேலைகளைத் துவக்கியுள்ள சிம்பு, இதன் ஒளிப்பதிவுப் பொறுப்பை பிசி. ஸ்ரீராமிடம் ஒப்படைக்க விரும்பியுள்ளார். ஆனால் தனக்குப் பிடித்த இயக்குநர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்றுவதில் குறியாக இருக்கும் பிசி, சிம்புவுக்கு முதலில் பிடிகொடுக்கவில்லையாம்.

உடனே, பிசி. ஸ்ரீராம் மீதான தனது அபிமானத்தை பல வழிகளிலும் காட்ட முயல, விஷயம் தெரிந்த பிறகு கதை கூட கேட்காமல் வாலிபன் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளார் பிசி. ஸ்ரீராம்.

ஏற்கெனவே விக்ரம் குமாரின் '24' படத்துக்கு கமிட்டாகியிருந்தார் பிசி. அந்தப் படம் டிராப்பாகி விட்டதால் அதே தேதிகளை சிம்புவுக்கு கொடுத்துள்ளாராம்.

வாலிபன் படத்தை எஸ்எஸ் சக்ரவர்த்தி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தன்னை வைத்து காளை என்ற படத்தை எடுத்து நஷ்டப்பட்ட சக்கரவர்த்திக்கு, அந்த நஷ்டத்தை வாலிபன் மூலம் சரி கட்டித்தருவதாகக் கூறியுள்ளாராம் சிம்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X