படிப்பா, நடிப்பா? - ஸ்லம்டாக் குழந்தைகளின் குழப்பம்!

விளைவு, தொடர்ந்து படிப்பதா அல்லது நடிப்பதா என்ற பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் ஸ்லம்டாக் சிறார் நடிகர்கள்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த சிறார் நடிகர்கள் அஸாருதீன் மற்றும் ரூபினா அலி. இவர்களின் தொடர் படிப்புக்கு ஸ்லம்டாக் மில்லியனர் படத் தயாரிப்பாளர்கள் உத்தரவாதம் செய்து விட்டனர். இவர்கள் பள்ளிப் படிப்பை படிக்க பள்ளியில் சேர்த்து விட்டுள்ளனர்.
ஆனால் மற்ற சிறார் நடிகர்களின் நிலைதான் கேள்விக்குறியாகியுள்ளது.
இவர்கள் படத்தில் சிறு கேரக்டர்களில் வந்து போனவர்கள். படப்பிடிப்புக்காக நிறைய நாட்கள் இவர்கள் பள்ளிக்குப் போகாமல் விட்டு விட்டனர். இதனால் பள்ளியில் தேர்வு எழுதத் தேவையான அட்டென்டன்ஸ் இல்லையாம்.
ஆனால் நிறையப் பட வாய்ப்புகள் வருவதால் சிலர் படிப்பை விட்டு விட்டு ஷூட்டிங் போக ஆர்வமாக உள்ளனராம்.
அதற்கு பள்ளியில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். படிப்பை விட்டு விட்டு படப்பிடிப்புக்குப் போவதா என்று கேட்கிறார்களாம்.
இதுகுறித்து சல்மான் என்ற சிறார் நடிகனின் தாயார் சயீதா ஷேக் கூறுகையில், பரீட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது பார்த்து படப்பிடிப்புக்கு போனால் எப்படி அனுமதிப்பது என்று கேட்கிறார்கள் என்கிறார்.
அதேபோல அர்பாஸ் என்ற சிறார் நடிகனின் தாயார் பில்கிஸ் அப்சல் கான் கூறுகையில், எனக்கு கணவர் இல்லை. எனது குழந்தைகள் நடித்துக் கொண்டு வரும் பணம்தான் குடும்பத்தை நடத்த உதவுகிறது என்கிறார்.
ஆனால்,பத்து வயது சாய்ரா ஷேக்கின் கதை வேறாக இருக்கிறது. சாய்ரா கூறுகையில், படிப்புதான் முக்கியம். எனவே அதில் கவனம் செலுத்து என ஆசிரியர்கள் கூறுகிறார்கள். படித்தால்தான் பெரிய ஆளாக முடியும் என்றும் கூறியுள்ளனர். நானும் படிப்பையே பெரிதாக கருதுகிறேன் என்கிறார்.
அவரது தாயார் பக்ருனிச்சா ஷேக்கும் இதை ஆமோதிக்கிறார். அவர் கூறுகையில் பரீட்சை முடியும் வரை எனது மகளை ஷூட்டிங்குக்கு அனுப்ப மாட்டேன் என்றார் உறுதியான குரலில்.
இந்த சேரிக் குழந்தைகளுக்கு படத்தில் நடிப்பது என்பது ஒரு சந்தர்ப்பமாக மட்டுமல்ல, அது பெரிய தொழில் போலவும் தெரிகிறது. இவர்களில் சிலரின் பெற்றோர் தங்களது பிள்ளைகள் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக உள்ளனர். சிலர் படிப்புக்கு வலியுறுத்துகின்றனர். இதனால் குழம்பிப் போயிருப்பது இந்தக் குழந்தைகள்தான்.


Click it and Unblock the Notifications











