விஜய்யிடம் அரசியல் 'புகலிடம்' கோரும் சோனா!

விஜய் மக்கள் இயக்கத்தில் சேர சோனா மும்முரம்!
முன்பு ஒரு பிரஸ் மீட்டில், "நான் விரைவில் விஜய்யின் அரசியல் இயக்கத்தில் சேர்ந்து சேவை செய்வேன்" என்று கவர்ச்சி நடிகை சோனா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் சோனா.
முதல்கட்டமாக, விஜய் மக்கள் இயக்கத்தில் சேர என்ன நிபந்தனை என்று கேட்டு விசாரித்த அவர், விரைவில் எஸ்ஏ சந்திரசேகரன் அல்லது விஜய்யை சந்தித்து தன்னை இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் போகிறாராம்.
இந்த இயக்கத்தின் மகளிர் அணி தலைவர் பொறுப்பை தனக்குத் தந்தால் சிறப்பாக சேவை செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜய் இயக்கத்தில் சேர சோனா இவ்வளவு தீவிரம் காட்ட காரணம், ஆளும் அரசியல் பிரமுகர்கள் மூலம் அவருக்கு மிரட்டல்தான் என்கிறார்கள்.
அந்த பிரமுகருடன் வாடகை பிரச்சினையில் தகராறு ஏற்பட, சோனா அவர் மீது போலீசில் புகார் தெரிவித்தார். ஆனால் போலீசோ, அதிமுக பிரமுகரை விட்டுவிட்டு சோனாவை விசாரிக்க ஆரம்பித்ததால், இப்போது அரசியல் பாதுகாப்பு தேட ஆரம்பித்துள்ளார் சோனா என்கிறார்கள் திரையுலகில்.


Click it and Unblock the Notifications











