ஹோட்டல் துவங்கிய சுரேஷ் மேனன்!

By Staff

Revathi with husband Suresh Menon
பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ் மேனன் ஹோட்டல் அதிபராக மாறியுள்ளார். சென்னை அடையாறு காந்தி நகரில் முழுக்க முழுக்க தென்னிந்திய பாணியிலான சைவ/அசைவ ஹோட்டல் ஒன்றை அவர் துவங்கியுள்ளார்.

ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்தவர் சுரேஷ் மேனன். இவரது மனைவி ரேவதி நடித்த புதிய முகம் படத்தைத் தயாரித்து, இயக்கி நாயகனாகவும் நடித்தார். பின்னர் பாச மலர்கள் படத்தைத் தயாரித்து இயக்கினார்.

இவற்றைத் தவிர ரேவதி இயக்கிய மித்ர- மை பிரண்ட், உள்ளிட்ட இந்திப் படங்களின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். (பின்னர் ரேவதி-மேனன் பிரிந்துவிட்டனர்).

இப்போது தனது ரசனைக்கேற்ப வித்தியாசமான ஹோட்டல் ஒன்றைத் துவங்கியுள்ளார். எப்போதும் ஓ வென்ற சத்தத்துடன் கொட்டும் அருவி, விட்டும் விடாத மாதிரி மழை பெய்யும் கேரளத்துச் சூழலுடன் இந்த உணவகத்தை அவர் டிசைன் செய்துள்ளார்.

இங்கு பரிமாறப்படும் உணவுகளும் வித்தியாசமானவையே. நம் கிராமங்களில் மெல்ல மெல்ல வழக்கொழிந்து வரும் பானகம், சுக்குத் தண்ணி போன்றவைதான் இங்கு வரவேற்பு பானங்கள்.

இங்கு சமையலுக்குப் பொறுப்பு பிரபல செப் ஜேக்கப். டிவி சமையல் நிகழ்ச்சிகளில் வரும் அதே விஐபி செப்தான்.

செல்லப் பிராணிகளோடு வருபவர்கள், அவற்றை எங்கே விடுவது என்று தடுமாறாமல் இருக்க அவற்றுக்கு தனி இடமும் ஒதுக்கியிருக்கிறார்கள். விரைவில் குழந்தைகளுக்கென்று தனிவிளையாட்டுப் பகுதியையும் ஆரம்பிக்கிறாராம். இங்கு குழந்தைகள் தவறி கீழே விழுந்தாலும் அடிபடாத மாதிரி தரை அமைக்கப்படுமாம்.

'கிரிம்ஸன் சக்ரா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டலை நடிகர் சூர்யாவும் அவர் மனைவி நடிகை ஜோதிகாவும் சமீபத்தில் திறந்து வைத்தனர். இதனுடன் இணைந்த சிற்றுண்டி உணவகத்துக்கு "13 பர்ஸ்ட் கிரெஸன்ட்" எனப் பெயர் வைத்துள்ளார் சுரேஷ் மேனன்.

ஹோட்டலின் சிறப்புகளைக் கேட்டபடி, சில உணவுகளைச் சுவைத்துப் பார்த்த சூர்யாவும் ஜோதிகாவும், மனம் திறந்து பாராட்டினர் சுரேஷ் மேனனை. சென்னை நகரில் இந்த மாதிரி உணவகம் அரிது என்றார் சூர்யா.

இயக்குநர்கள் ராஜீவ் மேனன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X