நான் மகான் அல்ல ஆடியோ ரிலீஸ்

By Sudha

Nan Mahan Alla
கார்த்தி, காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ள நான் மகான் அல்ல படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டன.

தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் வெளியிடும் படம் நான் மகான் அல்ல. ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார்.அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் காஜல் அகர்வால்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நா.முத்துக்குமார், யுகபாரதி பாடல்களை புனைய, சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீடு இன்று நடந்தது. இதில் கார்த்தி, காஜல் அகர்வால், யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் விஷ்ணுவர்த்தன், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கார்த்தி பேசுகையில், காதல், கல்யாணம் குறித்துப் பேசினார். அவர் கூறுகையில்,

பையாவில் இடம் பெற்ற அடடா மழைடா அடை மழைடா பாடலை போகுமிடமெல்லாம் பாடி பெருமை படுத்துகிறார்கள். அது போல் இந்த படத்திலும் எல்லா பாடல்களும் நன்றாக வந்துள்ளன. சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

மேடையில் என்னைப் பற்றி நிறைய பேர் பேசினார்கள். நான் காதலிப்பதாகவும் சொல்லப்பட்டது. நிச்சயமாக நான் காதல் திருமணம் செய்ய மாட்டேன். பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்றார் கார்த்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X