எந்திரனுக்கு 'யூ'

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எந்திரன் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்த பிரமாண்டமான ஹைப்களும், டிரெய்லரும், பாடல்களும் எந்திரன் எப்படி இருக்குமோ என்ற பெரும் எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எந்திரன் டிரெய்லர் வெளியீட்டை இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக நடத்தியிருந்தனர். அதாவது தியேட்டர்களில் நடத்திய இந்த விழாவுக்கு டிக்கெட் போட்டு ரசிகர்களை உள்ளே அனுப்பினர்.
இந்த நிலையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்கி விட்டனர். படத்தைப் பார்த்த சென்சார் கமிட்டி உறுப்பினர்கள், படம் பிரமாதமாகவும், பிரமாண்டமாகவும் வந்திருப்பதாக கூறி பாராட்டியதோடு, யூ சான்றிதழையும் அளித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications