'20-20': 2வது 'இன்னிங்ஸ்' ஆரம்பம்!

By Staff

Nayanatara
மலையாள நடிகர் சங்கமான அம்மா தயாரிக்கும் டுவென்டி 20 படத்தின் 2வது ஷெட்யூல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

மலையாள நடிகர் சங்கமான அம்மா, மலையாளத் திரையுலகின் முன்னணிக் கலைஞர்கள் அத்தனை பேரையும் வைத்து டுவென்டி 20 என்ற பெயரில் மெகா படம் ஒன்றைத் தயாரிக்கிறது.

மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, திலீப், நயனதாரா, நவ்யா நாயர், காவ்யா மாதவன், பாவனா, கோபிகா என அத்தனை முன்னணி நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர்.

இப்படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு 2வது ஷெட்யூல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கொசத்சியில் நடந்த படப்பிடிப்பில் முன்னணி நட்சத்திரங்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டனர்.

2வது கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 4ம் தேதி முடிவடைகிறதாம். ஜோஷி படத்தை இயக்குகிறார். இன்னும் 40 சதவீத படப்பிடிப்புதான் நடக்க வேண்டியுள்ளது. மே மாதத்திற்குள் படத்தின் டாக்கி போர்ஷனை முடித்து விடுவோம் எனக் கூறுகிறார் ஜோஷி.

ஜூன் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X