உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்!

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் செ அரங்கநாயகம். இவருடைய மகள் பாவை மலர் - எம்என் ராஜா தம்பதியின் மகன் விஷ்ணு சரண் இப்போது ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். படத்துக்கு உங்க வீட்டுப் பிள்ளை என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆஷிதா, சுரபி என இரு புதுமுகங்கள் நாயகிகளாக நடிக்கின்றனர். சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இந்தப் படத்தின் துவக்க விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை நடந்தது. கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் குத்துவிளக்கேற்றி வைத்து, பட வேலைகளை தொடங்கி வைத்தார்.
இந்த படத்தை லீலா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரவீஸ் குழிபள்ளி தயாரிக்கிறார். கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார், பிரசாந்த்.
மத்திய செய்தி-ஒளிபரப்பு துறை இணை மந்திரி ஜெகத்ரட்சகன், தமிழக அமைச்சர் பூங்கோதை, முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம், மகளிர் ஆணைய தலைவர் சற்குணபாண்டியன், சட்டப்பேரவை செயலாளர் செல்வராஜ், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், துணைத் தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் மற்றும் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்கள்.
கதாநாயகன் விஷ்ணு சரணின் தந்தையும், பனை-தென்னை தொழிலாளர்கள் நல சங்க தலைவருமான எம்.என்.ராஜா வரவேற்று பேசினார். டைரக்டர் பிரசாந்த் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை பட அதிபரும் பிஆர்ஓவுமான விஜயமுரளி தொகுத்து வழங்கினார்.


Click it and Unblock the Notifications











