பெண் சிங்கம்: மீண்டும் இணைந்த வாலி-வைரமுத்து

ஆனால் 'சிவாஜி'க்குப் பிறகு இருவரும் சேர்ந்து பணியாற்றாமல் இருந்தனர். வாய்ப்பும் அமையவில்லை. இந்த நிலையில் பெண் சிங்கம் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுகின்றனர்.
முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகும் படம் இந்த பெண் சிங்கம். இந்தப் படத்தில் ஒரு டூயட் பாடலையும் எழுதியுள்ளார் அவர்.
மற்ற பாடல்களை வாலியும் வைரமுத்துவும் எழுதியுள்ளனர். தேவா போட்ட மெட்டுக்களுக்கு மின்னல் வேகத்தில் எழுதி முடித்தனராம் இரு கவிஞர்களும்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் பாலி ஸ்ரீரங்கம் கூறுகையில், "பெண் சிங்கத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தப் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் கலைஞரின் திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள்.
இத்துடன் இப்போது வாலி, வைரமுத்துவின் பங்களிப்பும் சேர்ந்துள்ளது மிகவும் சந்தோஷமாக உள்ளது" என்றார்.
கருணாநிதி 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சுருளிமலை என்ற கதைதான் இந்த பெண் சிங்கத்தின் மூலக் கதை. உதய்கிரண், மீரா ஜாஸ்மின், கார்த்திகா, வாகை சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஆறுமுகனேரி முருகேசன் தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











