twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோக்கள் பாடுவதால் பாடகர்களுக்கு ஆபத்தில்லை - சுந்தர் சி பாபு

    By Staff
    |

    Sundar C.Babu
    கதாநாயகர்கள் பின்னணி பாடுவதால் பாடகர்களுக்கு ஆபத்து வரும் என்பதை நான் நம்பவில்லை என்றார் இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு.

    இப்போதெல்லாம் புதிய படங்களில் குறைந்தது ஒரு பாடலையாவது அந்தப் படத்தின் நாயகர்கள் பாடுவதைக் கவனிக்கலாம்.

    இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், கந்தசாமியில் தனக்கான பாடல்கள் முழுவதையும் தானே பாடிக் கொண்டுள்ளார் நடிகர் விக்ரம்.

    இதே நிலை இன்னும் சில படங்களிலும் தொடர்கிறது. இதனால் தொழில்முறையில் பின்னணி பாடும் கலைஞர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களின் இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இப்படிக் கூறினார்:

    முன்பெல்லாம் கமல்தான் அதிகம் பாடுவார். இப்போது கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுமே பாடுகிறார்கள்.

    ஆனால் இதனால் பாடகர்களின் வாய்ப்புகள் பறிபோய்விடாது. நடிகர்களால் எல்லா படங்களிலும் பாடுவது சிரமமான விஷயம். விளம்பரத்துக்காக ஓரிரு பாடல்களைப் பாடுகிறார்கள். அவ்வளவுதான்.

    எஸ்பிபி ஏராளமான படங்களில் ரஜினி, கமலுக்கு கூட (தெலுங்கு) டப்பிங் பேசியுள்ளார். அதற்காக அவர் டப்பிங் கலைஞராகி விடுவாரா... அல்லது நடிகராகத்தான் முடியுமா... அவர் ஒரு பின்னணி பாடகர் என்பதே நிரந்தரம். அப்படித்தான் நடிகர்கள் பாடுவதும், என்றார்.

    தற்போது அகம்புறம், மெய்காண், அகராதி படங்களுக்கு இசையமைத்து வரும் சுந்தர் சி பாபு, எக்காரணம் கொண்டும் ரீமிக்ஸ் செய்யக் கூடாது என்பதை கொள்கையாக வைத்துள்ளாராம்.

    அடடே...!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X