ஷார்ட் டைம் மெமரி லாஸ் “கஜினி“… வெளியாகி 16 வருஷம் ஆச்சு !

சென்னை : கஜினி திரைப்படம் வெளியாகி இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவு செய்வதை சூர்யாவின் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

2005ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கஜினி.

இத்திரைப்படத்தில் சூர்யா,அசின்,நயன்தாரா, ரியாஸ் கான் ஆகியோர் லீட் ரோலில் நடித்திருந்தனர்.

ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்

ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்

கஜினி திரைப்படத்தில் சூர்யா ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் நோயாளியாக பட்டையை கிளப்பி இருப்பார். எதையும் 15 நிமிடங்களுக்கு மேல் ஞாபம் வைத்துக்கொள்ள முடியாத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வரும் சூர்யா, அனைத்தையும் மறந்து திடீரென அறையைச் சுற்று முற்றும் பார்க்கும் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி என்னம்மா நடிச்சிருக்கான் மனுஷன் என்று சொல்லத்தோன்றும்.

அழகிய காதல்

அழகிய காதல்

எப்போதும் பேசிக்கொண்டு இருக்கும் அசினைப் பார்த்துப் பழகி காதல் வயப்படும் காட்சிகள் அட்டகாசம். மிக மென்மையாகவும் , அழகாகவும் காட்சிக்கு காட்சி படம் அழகாக தெரியும். படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனாலும், இந்த படத்தில் காதல் காட்சிகளை நினைத்து பார்க்கும் போது சும்மா ஜிவ்வுனு இருக்கும்.

ஒரு சில காட்சியில்

ஒரு சில காட்சியில்

இப்படத்தில் கல்லூரி மாணவியாக நயன்தாரா வருகிறார். நயன்தாராவின் ஆரம்பகால திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தில் அவர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.

பட்டிதொட்டி எங்கும்

பட்டிதொட்டி எங்கும்

சுட்டும் விழிச் சுடரே, ஒரு மாலை இளவெயில் நேரம் ஆகிய இரண்டு பாடல்களும் கேட்கவும் இனிமையாய், பார்வைக்கும் அழகாய் இருக்கின்றன. ஹாரிஸ் ஜெயராஜின் இசை இப்படத்திற்கு பிளஸாக அமைந்தது. பட்டி தொட்டி எங்கும் சுட்டும் விழிச்சுடரே சுடர்விட்டு எரிந்தது.

கம்பீரமான நடிப்பு

கம்பீரமான நடிப்பு

ஹாலிவுட் படமான மெமென்டோ திரைப்படத்தில் வரும் 'மெமரி லாஸ்' கதையையும், ஹாப்பி கோ லவ்லி - 1951 படத்தில் இருந்து, காதல் காட்சிகளையும் எடுத்து, ஒன்றாக சேர்த்து கஜினி என்ற திரைப்படத்தை கொடுத்திருந்தார். இது ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவலாக இருந்தாலும் இத்திரைப்படத்தின் முழு வெற்றிக்கு சூர்யாவின் அபாரமான நடிப்பே கம்பீரமாக ஜொலித்தது.

16 Years Of Ghajini

16 Years Of Ghajini

2005ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் திரைக்கு வந்து இன்றோடு 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை சூர்யாவின் ரசிகர்கள் #16YearsOfGhajini என்ற ஹேஷ்டேக்கை தெறிக்கவிட்டு வைரலாக்கி வருகின்றனர். மேலும் பல ரசிகர்கள் கஜினி திரைப்படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து சூர்யாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X