யுவன் - செல்வராகவன் டமால்!

By Staff

Yuvan Shankar Raja
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. அது சினிமாவுக்கும் பொருந்தும். நேற்று வரை நெருக்கமாக இருந்த யுவன் சங்கர் ராஜாவும், இயக்குநர் செல்வராகவனும் பிரிந்து விட்டனராம்.

80களில் கலக்கிய பாரதிராஜா, இளையராஜா போல, லேட்டஸ்டாக ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தவவர்கள் செல்வாவும், யுவனும். இருவரும் இணைந்த காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய அனைத்துப் படங்களிலுமே பாடல்கள் சூப்பர் ஹிட்.

அஜய் தேவ்கனை வைத்து தான் இயக்கப் போகும் இந்திப் படத்தின் மூலம் யுவனை இந்தியிலும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தார் செல்வா. தொடர்ந்து இணைந்து பணி செய்து வந்த இவர்களுக்குள் இப்போது லடாய் வந்து விட்டது.

செல்வராகவன் இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் யுவனுக்குப் பதில் ஜி.வி.பிரகாஷ்குமாரை ஒப்பந்தம் செய்துள்ளாராம் செல்வராகவன்.

இப்படத்துக்காக ஏற்கனவே யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு சில பாடல்களையும் பதிவு செய்து வைத்து விட்டார். அதில் ஒரு பாடலை செல்வாவும் படமாக்கி விட்டார். அந்தப் பாடல் செம ஹிட் ஆகும் என்று படக் குழுவினர் பேசி வந்தனர்.

இந்த நிலையில்தான் திடீரென பிரச்சினை ஏற்பட்டு இருவரும் விலகி விட்டனராம். இருவருக்கும் இடையிலான இந்தப் பிரிவுக்கு, பணம் தான் காரணம் என்கிறார்கள்.

யாரடி நீ மோகினி படத்திற்கு இசையமைத்தற்காக யுவனுக்கு இன்னும் சம்பளத்தைக் கொடுக்கவில்லையாம் செல்வா. மேலும் தற்போது யுவன் வாங்கிக் கொண்டிருக்கும் ரூ. 1 கோடி சம்பளத்தைத் தர அவர் தயங்குகிறாராம்.

ஆனால் செல்வா தரப்பு வேறு மாதிரியாக கூறுகிறது. செல்வாவின் அனைத்துப் படங்களுக்குமே இசையமைப்புப் பணிகளில் யுவன் மெத்தனம் காட்டி வந்தாராம். குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ரொம்பவே தாமதம் செய்து வந்தாராம். இதனால்தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்ததாக செல்வா தரப்பு கூறுகிறது.

சில மாதங்களுக்கு முன்புதான் செல்வா, யுவன் மற்றும் கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் இணைந்து ஒயிட் எலிபன்ட்ஸ் என்ற நிறுவனத்ைத உருவாக்கினர். ஆனால் அந்த நிறுவனத்தின் சார்பில் ஜிங்கிள்ஸ் கூட வெளிவராத நிலையில் முதலில் அரவிந்த் கிருஷ்ணா வெளியேறினார். பிறகு யுவனின் மனைவி சுஜயா வெளியேறினார். தற்போது யுவனும் போய் விட்டார்.

ஒரு முறை கூட 'பிளிறாமல்' ஒயிட் எலிபன்ட்ஸ் காணாமல் போனதுதான் பரிதாபம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X