twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரகாஷ் ராஜ் இயக்கிய முதல் கன்னடப் படம்-125 நாள் ஓடி சாதனை

    By Sudha
    |

    Prakash Rai, Amoolya and Sithara
    கன்னடத்தில் பிரகாஷ் ராஜ் இயக்கிய முதல் படமான நானு நன்ன கனசு படம் 125 நாட்களைத் தொட்டு புதியசாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் 100 நாட்களைக் கடந்த 2வது படமாம் இது.

    நானு நன்ன கனசு என்ற பெயரில் கன்னடத்தில் ஒரு படத்தை இயக்கினார் பிரகாஷ் ராஜ். இது அவரது இயக்கத்தில் வெளியான முதல் கன்னடப் படம். இப்படம் இப்போது 125 நாட்களைத் தொட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

    இப்படி 100 நாட்களுக்கு மேல் ஒரு படம் கன்னடத்தில் ஓடுவது பெரிய சாதனையாகும். இந்த வருடத்தில் ஆப்தமித்ரா படம்தான் 100 நாட்களைத் தாண்டி ஓடியிருந்தது. 2வது படம் பிரகாஷ் ராஜின் படமாகும்.

    இதையடுத்து விழா எடுத்து விருந்தளித்துக் கொண்டாடியுள்ளனர் நானு நன்ன கனசு பட யூனிட்டார்.

    இந்தப் படத்திற்கு பெங்களூரில் தியேட்டர்கள் சரியாக கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். இதுகுறித்து அவர் கூறுகையில், கேஜி சாலையில் (கெம்பே கெளடா சாலை) உள்ள தியேட்டர்களை சில விநியோகஸ்தர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டமாக உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். பெங்களூரில் நிறைய தியேட்டர்கள் கட்டப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற நிலை மாறும்.

    படத்தை எடுத்து விட்டு தியேட்டர் கிடைக்காமல் காத்திருந்தால் என்ன புண்ணியம் என்றார் அவர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X