குஷ்புவின் ஐந்தாம்படையில் சிம்ரன் பாடல் காட்சியில் கட்

ஐந்து சகோதரர்கள் பற்றிய படம் இது. நாசர் மூத்த அண்ணனாக வருகிறார். சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ளார். விவேக்கும் ஒரு சகோதரராக வருகிறார்.
சுந்தர்.சிக்கு ஜோடியாக டெல்லியைச் சேர்ந்த அதிதி நடித்துள்ளார். சிம்ரன் முக்கிய வேடத்தில் வருகிறார்.
படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பினர். அப்போது சிம்ரன் இடம் பெற்று ஆடியிருந்த ஒரு பாடல் காட்சியில், உடன் நடிப்பவர்களின் தொப்புள்கள் படு குளோசப்பில் காட்டப்பட்டிருந்தன.
இது உள்பட 3 இடங்களில் வெட்ட பரிந்துரை செய்தனர். ஆனால் இயக்குநர் பத்ரி அதற்கு ஆட்சேபித்தார். இருப்பினும் உறுப்பினர்களில் ஒருவரான முக்தா சீனிவாசன் இதை வெட்டினால் படம் தரமானதாக மாறி விடும் என்று கூறியதைத் தொடர்ந்து காட்சிகளை வெட்ட பத்ரி சம்மதித்தார்.
இதையடுத்து படத்துக்கு யு சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து படம் திரைக்கு வருகிறது.
Comments
3 காட்சிகளுக்கு வெட்டு 3 cuts aintham padai ஐந்தாம்படை சினிமா சிம்ரன் சுந்தர்சி சென்சார் தமிழ் பாடல் censor cinema simran songs sundarc


Click it and Unblock the Notifications