குணமடைந்து வீடு திரும்பினார் அமிதாப்!

சில தினங்களுக்கு முன் தனது 66-வது பிறந்த நாளைக் கொண்டாடிய அமிதாப் திடீர் வயிற்று வலி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறி இன்று காலை வீடு திரும்பினார்.
அவரது மகன் அபிஷேக் பச்சன், மனைவி ஜெயா பச்சன் ஆகியோர் அமிதாப்பை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து 3 வாரங்கள் அமிதாப்புக்கு பூரண ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறியிருப்பதால், இப்போதைக்கு படப்பிடிப்புகளில் அவர் பங்கேற்க மாட்டார். வீடு திரும்பிய அமிதாப்பை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஏராளமான ரசிகர்கள் வீட்டுக்கு முன் திரண் நின்று அவரை வாழ்த்தினர்.
Comments


Click it and Unblock the Notifications