'அண்ணன் தம்பி' லேட்!

By Staff

Gopika
மம்முட்டியின் ரசிகர்களுக்கு இந்தாண்டு விஷு பெருத்த ஏமாற்றமாகப் போய் விட்டது. காரணம் அவர்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்த்த 'அண்ணன் தம்பி' படம் விஷுவுக்கு ரிலீஸாகவில்லை.

மலையாளப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதியன்று மம்முட்டியின் அண்ணன் தம்பி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் 3 நாட்களுக்கு ரிலீஸைத் தள்ளிப் போட்டு விட்டனர்.

இதையடுத்து படம் இன்றுதான் திரைக்கு வருகிறது. கடந்த வாரம்தான் படத்திற்கு சென்சார் முடிந்து, யு சர்டிபிகேட்டை வாங்கியுள்ளார் இயக்குநர் அன்வர் ரஷீத்.

மம்முட்டியுடன் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் கோபிகா. கேரளா முழுவதும் 70 தியேட்டர்களில் படம் ரிலீஸாகிறது.

படம் லேட் ஆனதற்கு முக்கிய காரணம், கடைசி நேரத்தில் சில காட்சிகளை இயக்குநர் ரஷீத் படத்தில் சேர்த்ததுதான். திரைக்கதையை பலப்படுத்துவற்காக இந்த வேலையை செய்ய வேண்டியதாகி விட்டதாம். இப்போது படம் பக்கவாக வந்திருப்பதாக ரஷீத் திருப்தி தெரிவித்துள்ளார்.

ஆனாலும் விஷுவன்றே படம் வந்திருக்க வேண்டும் என்று மம்முட்டி ரசிகர்கள் ஆதங்கப்பட்டுக் கொள்கிறார்கள்.

சேட்டா, இனிமே வராதீங்க லேட்டா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X