மங்காத்தாவில் நாகார்ஜுனா நீக்கம்: அஜீத்துடன் அர்ஜுன்-சினேகா?

அந்தப் பாத்திரத்தில் இப்போது அர்ஜுன் நடிக்கவிருப்பதாகவும், சினேகாவும் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
அஜீத்தின் பொன்விழாப் படமான மங்காத்தா, பெரும் பொருட் செலவில் தயாநிதி அழகிரி தயாரிப்பில் உருவாகிறது. வெங்கட் பிரபு இயக்குகிறார்.
அஜீத் - த்ரிஷா டூயட் மற்றும் அஜீத் அறிமுக பாடல் காட்சி படமாக்கத்துடன் மங்காத்தா படப்பிடிப்பு தொடங்கியது. சமீபத்தில்தான் இதன் பாங்காக் ஷெட்யூல் முடிந்து, படக்குழுவினர் சென்னை திரும்பினர்.
இந்நிலையில், இந்தப் படத்தின் இன்னொரு நாயகனான நாகார்ஜுனா நீக்கப்பட்டுவிட்டதாகவும், அவருக்கு பதில் அர்ஜுன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
சினேகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவாவில் நடித்தவர் சினேகா. அஜீத்துடன் ஆஞ்சநேயா படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
Comments


Click it and Unblock the Notifications