twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திய ஏழ்மையைப் படம் பிடித்தால்தான் பாராட்டா?-அமிதாப்

    By Staff
    |

    Amithab with Aishwarya Rai and Abhishek
    ஸ்லம்டாக் மில்லியனேர் படம் சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்து வரும் நிலையில் அந்தப் படத்தை விளாசித் தள்ளியிருக்கிறார் இந்தி(ய) சினிமாவின் அடையாளங்களுள் ஒருவரான அமிதாப் பச்சன்.

    இது குறித்து தனது ப்ளாக்கில் அவர் எழுதியுள்ளதாவது:

    டேனி பாய்லே இயக்கி ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம், இந்தியாவின் ஏழ்மையை, அழுக்கை, அதனால் ஏற்படும் வேதனைகளை வெளிச்சம் போட்டுக காட்டுகிறது. இந்தியாவில் இந்த நிலை என்றால், வளர்ந்த நாடுகளில் அதற்கேற்ற மோசமான எத்தனையோ விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றை யாரும் படம் பிடித்துக் காட்டி விருது வாங்க முயற்சிப்பதில்லை.

    ஸ்லம்டாக் மில்லியனேர் படம் ஒரு இந்தியரால் எழுதப்பட்டு, மேற்கத்தியரால் படமாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இன்று உலகின் பார்வை அதன்மீது பதிந்துள்ளது.

    இந்தியாவின் ஏழ்மையைப் படமாக்கினால் மட்டும் பாராட்டுகிற மேற்கத்திய உலகம், இந்தியாவின் மாஸ் எண்டர்டெயின்மெண்ட் என்று புகழப்பட்ட எத்தனையோ சிறந்த வணிகப் படங்களை கண்டுகொள்ளவே இல்லை. அவர்களுக்கு சத்யஜித்ரேயை மட்டுமே பாராட்டத் தெரிந்திருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளாக பலவித உத்திகளைப் பயன்படுத்தி மக்களைச் சந்தோஷப்படுத்தி வரும் இந்திய கமர்ஷியல் சினிமா அவர்களுக்குத் தெரிவதே இல்லை.

    சத்யஜித்ரே இயல்பான விஷயங்களைத் திரையில் காட்டினார். அவருக்கு தரப்பட்ட பாராட்டு நியாயமானதே. ஆனால் மற்றவர்கள் எடுத்த வணிகத் திரைப்படங்களை கேன்ஸ், வெனிஸ் உள்ளிட்ட எத்தனையோ திரைவிழாக்களில் பங்கேற்கக் கூட அனுமதிக்கவில்லை.

    இப்போதும் பாருங்கள்... பல சர்வதேச தொலைக்காட்சிகள் இந்தித் திரைப்படங்களைத்தான் முதன்மை நேரத்தில் காட்டி வருகின்றன. வசூலைக் குவிக்கின்றன. கொட்டும் பனியில் லீசெஸ்டர் ஸ்கொயரில் இந்திப் பட பிரியமிருக்கு காத்திருக்கிறார்கள் ஹாலிவுட் படங்களை மட்டுமே பாராட்டும் வெள்ளைக்காரர்களும்.

    ஆனால் சர்வதேச அங்கீகாரம் தருவதற்கு மட்டும் யோசிக்கிறார்கள்..., என அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X