அடுத்த படத்தில் இயக்கம் மட்டுமே-சேரன்

முக்கியமான விஷயம் இந்தப் படத்தில் சேரன் நடிக்கவில்லை. இயக்கம் மட்டுமே.
பொக்கிஷத்துக்கு மிகப் பிரமாதமான வரவேற்பு இருப்பதாகவும், இதுவரை தான் உருவாக்கிய படங்களிலேயே பெஸ்ட் இந்தப் படம்தான் என்றும் சேரன் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
இனி தேவைப்பட்டால் மட்டுமே நடிப்பது என்றும் இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி, பொக்கிஷம் போன்ற படங்களை உருவாக்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொக்கிஷம் நீளம் குறைப்பு!
இதற்கிடையே, பொக்கிஷம் படத்தின் சில காட்சிகள் மற்றும் தேவையற்ற பாடல்கள் வெட்டப்பட்டு ட்ரிம்மாக்கப்பட்டு விட்டது.
மொத்தம் 20 நிமிடக் காட்சிகள் குறைக்கப்பட்டதாக சேரன் தெரிவித்துள்ளார்.
ஆட்டோகிராப் படமும் இதே போல நீளம் குறைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications