ராமாராவின் மரணத்துக்கு காரணமான நாயுடுவுக்கா ஓட்டு?-சிரஞ்சீவி

ஆந்திர மாநிலம் விஜய வாடா என்.டி.ராமராவ் சர்க்கிளில் நடிகர் சிரஞ்சீவி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஆந்திர மக்கள் வறுமையில் செத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் முறைகேடான ஆட்சிகள்தான்.
மக்களின் வறுமையை ஒழிக்க இந்தக் கட்சிகள் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
நாட்டில் 60 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது காங்கிரஸ்தான். ஆனால் அப்போதெல்லாம் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்துவிட்டு, இப்போது வறுமையை ஒழிப்பதாக ராகுல் காந்தி கூறிவருவது ஏமாற்று வேலை.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு எனக்கு திறமை எதுவும் இல்லை என்று கூறி வருகிறார். திறமை இல்லாமலா நான் 30 ஆண்டுகள் தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டாராக இருந்தேன்?
சந்திரபாபு நாயுடு அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி அனைத்தும் பொய்யானவை, ஒருபோதும் அமல்படுத்த முடியாதவை.
மோசடி செய்வதிலும், பொய் கூறுவதிலும் சந்திரபாபு நாயுவை மிஞ்ச ஆளில்லை. ஆந்திர மக்களின் நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்த என்டி ராமாராவின் பதவியை நயவஞ்சகமாகப் பறித்து, அவரது உயிருக்கே உலை வைத்தவர்தான் சந்திரபாபு நாயுடு.
இந்தமாதிரி ஒருவர் மீண்டும் முதல்வரானால், ஆந்திரா படுகேவலமான நிலைக்குப் போய்விடும். என பிரஜா ராஜ்யத்தை ஆதரியுங்கள், என்றார் சிரஞ்சீவி.


Click it and Unblock the Notifications











