மனாலி நிலச்சரிவில் சிக்கிய ஐஸ்வர்யா, அக்ஷய் குமார்

By Sudha

Aishwarya Rai
மனாலிக்கு படப்பிடிப்புக்குச் சென்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஐஸ்வர்யா ராயும், அக்ஷய் குமாரும் சிக்கிக் கொண்டனர்.

ஆக்ஷன் ரீப்ளே என்ற படத்தில் ஐஸ்வர்யாவும், அக்ஷய் குமாரும் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு மனாலி பகுதியில் நடந்து வருகிறது. இருவரும் பிசியானவர்கள் என்பதால் ஒருநாளைக் கூட வீணாக்காமல் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அப்பகுதியில் பெய்த மழையால் இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

ரோடாங் பாஸ் பகுதியில் படப்பிடிப்புக்காக ஐஸ்வர்யா ராய், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் சென்ற நிலையில், அப்பகுதிக்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்புக் குழுவினரில் ஒரு பகுதியினர் ஐஸ்வர்யா ராய் இருந்த பகுதிக்கு வர முடியவில்லை.

இதையடுத்து வேறு இடத்திற்கு ஷூட்டிங் மாற்றப்பட்டது. அங்கு இடம் பெயர்ந்து சென்றபோது இன்னொரு நிலச்சரிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் ரத்து செய்து விட்டனர்.

ஒருவேளை இந்தப் பகுதியில் படப்பிடிப்பு தொடங்கியிருந்தால் திரும்பி வருவது பெரும் சிக்கலாகியிருக்கும் என அதிகாரிகள் கூறியதால் பெரும் கண்டத்திலிருந்து தப்பினோம் என்று படப்பிடிப்புக் குழுவினர் நிம்மதியடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X