twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலைஞர் டிவி விளம்பரம்.. அஜீத் இல்லை!

    By Staff
    |

    Ajith Kumar
    'பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற தலைப்பில், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகமே ஒரு பெரும் பாராட்டு விழா எடுத்தது. அந்த விழாவில்தான் 'எங்களை மிரட்டி பாராட்டு விழாவுக்கு வர வைக்கிறார்கள்' என்று குரல் கொடுத்தார் அஜீத்.

    அதன் பிறகு ஆளாளுக்கு பதில் குரல் கொடுக்க, எப்படியோ நடக்கவிருந்த பாராட்டு விழா, ஒரு மாதிரி நடந்து முடிந்தது.

    இப்போது அந்த பாராட்டு விழாவை, கலைஞர் டி.வி. விரைவில் ஒளிபரப்புகிறது.

    இதற்கான கிளிப்பிங்ஸ் மற்றும் புரமோஷனல் விளம்பரங்கள் தற்போது கலைஞர் குழும சேனல்களில் உலா வருகின்றன.

    இதில் ரஜினி, கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா மற்றும் நடிகைகளின் பெயர்களைக் கூட குறிப்பிடும் அறிவிப்பாளர், அந்த நட்சத்திர பட்டியலில் அஜீத் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. மனைவி ஷாலினி சகிதம் பங்கேற்ற அவரது படமும் கூட தவிர்க்கப்படுகிறது. விழாவின் ஹைலைட்டே அஜீத்தின் பேச்சுதான். அதையும் கவனத்துடன் தவிர்த்து விட்டுள்ளனர்.

    இப்படியொரு நிகழ்ச்சியில் அஜீத் வந்து போனார் என்றாவது காட்டுவார்களா!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X