கமல் பாராட்டைப் பெற்ற புகைப்படம்!

இந்தத் தலைப்புக்காவே இந்தப் படத்துக்கு பலரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளதாம். முக்கியமாக கலைஞானி கமல்ஹாசன் தனது பாராட்டுக்களை போன் மூலம் தெரிவித்தாராம் இயக்குநருக்கு.
அப்படி என்ன பதிவு செய்யப் போகிறீர்கள் இந்த புகைப்படத்தில்? படத்தின் இயக்குநர் ராஜேஷ் லிங்கத்திடம் கேட்டோம்.
படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டனும் நானும் கல்லூரித் தோழர்கள். எங்கள் கல்லூரி வாழ்வின் பதிவுதான் இது. படம் வந்ததும் நிச்சயம் கொண்டாடப்படுவோம். வாழ்க்கையை அதன் இயல்பான அழகுடன் வாழ்ந்து பார்க்கும் மனிதர்களைப் படம் பிடிக்கப் போகிறோம், இந்தப் புகைப்படத்தில்.
கல்லூரி வாழ்க்கையில் ஏற்படும் காதல் மோதல்கள்தான் படத்தின் நிகழ்வுகள் என்றாலும் சினிமாவில் வழக்கமாகப் பார்க்கும் கல்லூரியாக இருக்காது, என்கிறார் ராஜேஷ்.
செல்வராகவனின் சிஷ்யராக இருந்தாலும், படம் முழுக்க துளிகூட செக்ஸ் கிடையாதாம். பாராட்ட வேண்டிய சமாச்சாரம்தான்!


Click it and Unblock the Notifications











