கமல்-ஸ்ரீவித்யா காதல் கதையா 'திரைகதா'?

இந்த ஓணத்தன்று கேரளாவில் திரையிடப்பட்டுள்ள திரைகதாதான் டாக் ஆப் கேரளா, இப்போது.
பிரபல கர்நாடகப் பாடகி எம்.எல் வசந்தகுமாரியின் மகளான ஸ்ரீவித்யா தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்.
புற்றுநோய் காரணமாக 2006-ல் மரணமடைந்தார். எழுபதுகளின் இறுதியில் நடிக்கத் துவங்கிய தனக்கும், தன்னுடன் அன்றைக்கு நிறைய படங்களில் ஜோடியாக நடித்த, அன்றைக்கும் வளரும் நாயகனாக இருந்து இன்று முன்னணி நாயகனாகத் திகழும் கமல்ஹாசனுக்கும் காதல் உருவானதாக, ஸ்ரீவித்யாவே பல பேட்டிகளில் கூறியிருந்தார்.
இதனை மறுக்காத கமல், அவை பலருக்கும் ஏற்படுவதைப் போன்ற ஒரு அனுபவம்தான் எனக் கூறியிருந்தார்.
தற்போது இந்தக் காதல் கதையை மையமாக வைத்து ஒரு படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர் கேரளாவில். பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படம் திரைகதா எனும் பெயரில் வெளியாகியுள்ளது.
பிரித்விராஜ்-னுப் மேனன் மற்றும் பிரியாமணி நடித்து வெளிவந்துள்ள படத்தின் கரு முழுக்க முழுக்க ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை மற்றும் காதல் குறித்தது என்று பேசப்படுகிறது.
இப்படத்தின் இயக்குநர் ரஞ்சித், தொலைக்காட்சிக்கு அளித்த நேர்முகத்தில், இது ஸ்ரீவித்யாவுக்கும், ஆரம்பத்தில் அவரைக் காதலித்து பிறகு உதறிவிட்ட ஒரு பிரபல தமிழ் நடிகருக்கும் இடையே நடந்த காதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் ஸ்ரீவித்யாவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் ப்ரியாமணி. அனுப் மேனன் சூப்பர்ஸ்டார் அஜய் சந்திரனாகவும், பிரித்விராஜ் இளம் இயக்குநர் அக்பர் அகமதாக நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











