Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜெயஸ்ரீ தம்பியை மணந்தார் கனிகா
பைவ்ஸ்டார் படத்தில் அறிமுகமாகி, வரலாறு' படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்தவர், கனிகா. இவருக்கும், நடிகை ஜெயஸ்ரீயின் தம்பி ஷாம் ராதாகிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஷாம் ராதாகிருஷ்ணன், பி.இ.' படித்தவர். அமெரிக்காவில், சாப்ட்வேர் கன்சல்டிங் கம்பெனி' நடத்தி வருகிறார்.
கனிகா-ஷாம் ராதாகிருஷ்ணன் திருமணம் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள எம்.எல்.எம். திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. வைதீக முறைப்படி நடைபெற்ற இத்திருமணத்தில், புரோகிதர்கள் மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, மணமகள் கனிகா கழுத்தில், மணமகன் ஷாம் ராதாகிருஷ்ணன் தாலி கட்டினார்.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக, மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது.
நடிகர்கள் பிரபு, பிரசாந்த், சேரன், ஒய்.ஜி.மகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, நடிகைகள் சுஹாசினி, அபர்ணா, டைரக்டர்கள் கே.பாலசந்தர், கே.எஸ்.ரவிகுமார், கவுதம் மேனன் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.