ஓலிம்பிக்கில் ஒரு தமிழரின் இசை!

வியப்பாகவும், அதே நேரம் பெருமையாகவும் இருக்கிறதல்லவா...
விளம்பரப் பட உலகிலும், இசைத் துறையிலும் லேகா ரத்னகுமாரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் ஏசியா டுடே எனும் பெயரில் உருவாக்கிய 3 டிராக்குகளை தனது கூட்டு நிறுவனமான சொனோட்டான் மூலம் ஒலிம்பிக்கில் ஒலிக்க வைக்கப் போகிறார்.
ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை பீஜிங்கில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவின் துவக்கநாள் மற்றும் இறுதி விழா ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்லாது, போட்டி நடக்கும் 15 நாட்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் பின்னணியில் சிறப்பு இசை முழங்கிக் கொண்டே இருப்பதுபோல இம்முறை போட்டிகளை வடிவமைத்துள்ளனர்.
இதற்கான இசை டிராக்குகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு ஜெர்மனியைச் சேர்ந்த சொனோட்டன் நிறுவனம் வழங்கியுள்ளது. அப்படி வழங்கப்பட்டுள்ள டிராக்குகளில் மூன்று தமிழகத்தைச் சேர்ந்த லேகா ரத்னகுமார் உருவாக்கியது. இந்த மூன்று டிராக்குகள் தவிர ஃபோகஸ் ஆன் ஏசியா எனும் பெயரில் இவர் மற்ற கலைஞர்களோடு சேர்ந்து உருவாக்கிய டிராக்கும் இடம்பெற்றுள்ளது.
இவா தவிர மேலும் ஏராளமான டிராக்குகளை ஒலிம்பிக் கமிட்டிக்கு வழங்கியுள்ளது சொனோட்டான்.
மேலும் இப்போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியிலும் உலகம் முழுவதும் நேரடியாக ஒலி-ஒளிபரப்ப உள்ளனர். அதிலும் இந்த சொனோட்டான் இசைதான் ஒலிக்கப் போகிறது. ஒருவேளை அந்த இசைக்குப் பதில் புதிதாக இசை தேவைப்படும் சேனல்கள் மற்றும் வானொலி நிலையங்கள் சொனோட்டானின் இந்திய கிளையான லேகா சொனோட்டானைத் தொடர்பு கொண்டால் போதும். தேவையான இசையை குறைந்த செலவிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
ஒலிம்பிக் போட்டிகளில் தமிழர் ஒருவர் உருவாக்கிய இசை டிராக் இடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











