ஆகஸ்ட் 20ம் தேதி மங்காத்தா ட்ரைலர்!

மங்காத்தா படத்தின் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கியது. முதல் தினத்தன்றே படத்தின் ட்ரைலரை படமாக்கினார் வெங்கட் பிரபு.
க்ளவுட் நைன் மூவீஸின் பிரமாண்ட தயாரிப்பான மங்காத்தா ட்ரைலர், இதே நிறுவனத்தின் மற்றொரு படமான நான் மகான் அல்ல ரிலீஸின் போது வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், "இது ஒரு புரமோஷனல் டெக்னிக். அஜீத் படத்துக்கு எப்போதுமே நல்ல விளம்பரம் கிடைத்துவிடும். ஆனால் அதையும் தாண்டி இந்தப் படத்தை பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்ய இந்த ட்ரைலர் உதவும். இது முதல் ட்ரைலர்தான். இது தவிர மேலும் மூன்று முன்னோட்டப் படங்களும் ரிலீஸ் செய்யப்படும்..." என்றார்.
மங்காத்தா படப்பிடிப்பு படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Comments
50வது படம் 50th film ajith அஜீத் க்ளவுட் நைன் மூவீஸ் மங்காத்தா ட்ரைலர் வெங்கட் பிரபு mangatha traler venkat prabhu


Click it and Unblock the Notifications