twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆகஸ்ட் 20ம் தேதி மங்காத்தா ட்ரைலர்!

    By Chakra
    |

    Ajith Kumar and Venkat Prabhu
    ஆகஸ்ட் 20-ம் தேதி அஜீத் நடிக்கும் 50வது படமான மங்காத்தா ட்ரைலர் வெளியிடப்படும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

    மங்காத்தா படத்தின் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கியது. முதல் தினத்தன்றே படத்தின் ட்ரைலரை படமாக்கினார் வெங்கட் பிரபு.

    க்ளவுட் நைன் மூவீஸின் பிரமாண்ட தயாரிப்பான மங்காத்தா ட்ரைலர், இதே நிறுவனத்தின் மற்றொரு படமான நான் மகான் அல்ல ரிலீஸின் போது வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், "இது ஒரு புரமோஷனல் டெக்னிக். அஜீத் படத்துக்கு எப்போதுமே நல்ல விளம்பரம் கிடைத்துவிடும். ஆனால் அதையும் தாண்டி இந்தப் படத்தை பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்ய இந்த ட்ரைலர் உதவும். இது முதல் ட்ரைலர்தான். இது தவிர மேலும் மூன்று முன்னோட்டப் படங்களும் ரிலீஸ் செய்யப்படும்..." என்றார்.

    மங்காத்தா படப்பிடிப்பு படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X