twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைவடிவம் பெறும் 'கலைஞர்' வரலாறு!

    By Staff
    |

    Karunanidhi
    அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் திரைத் துறையில் சாதனைப் படைத்து வரும் அரிய 'கலைஞர்' முதல்வர் கருணாநிதி. பராசக்தி தொடங்கி, உளியின் ஓசை வரை கலைஞரின் திரை எழுத்துக்கு உள்ள வலிமை உலகமறிந்தது.

    காலத்தின் மாற்றம், மக்களின் மாறும் ரசனைகளுக்கேற்ப தன் எழுத்துப் பாணியிலும் புதிய மாறுதல்களைப் புகுத்தி ரசிக்க வைத்த மாபெரும் கலைஞர் அவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

    அரசியலில் அவரது அனுபவமே மிகப் பெரிய பாடம். பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய மிகச் சிறந்த திரைக்கதை என்றால் அது கலைஞரின் வாழ்க்கையாகத்தான் இருக்கும்.

    அந்த திரைக்கதையை இப்போது படமாக எடுக்க கலைஞரின் அபிமானிகள் சிலர் முயன்று வருகின்றனர்.

    இந்தப் படத்தை இயக்கப்போகிறவர் அறிமுக இயக்குநர் ஜி.சக்தி. இந்தப் படத்துக்காக கடந்த 2 ஆண்டுகளாக கலைஞரின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறாராம் சக்தி.

    இந்தப் படத்துக்கு இளையராஜாவைத் தவிர வேறு யாரிடமும் இசைக்காக அணுகப் போவதில்லை என ஆரம்பத்திலேயே கூறிவிட்டாராம் சக்தி. அதைத் தெரிந்து கொண்டாரோ என்னமோ... சக்தி கேட்டதும் உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம் ராஜா.

    படத்துக்குத் தலைப்பு என்ன தெரியுமா... 'கலைஞர்'!


    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X