ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா!

By Staff

A R Rahman
உலக சினிமாவின் உன்னதமான விருதுகளாகப் போற்றப்படும் ஆஸ்கர் மற்றும் கிராமி விருதுகளை அடித்தடுத்து வென்ற ஏஆர் ரஹ்மானைக் கவுரவப்படுத்த ஒரு இசை நிகழ்ச்சி நடக்கிறது சென்னையில்.

இதற்குப் பெயர் ரஹ்மானியா!

இந்த விழாவில் ஒரு சிறப்பு அம்சம்... ரஹ்மானால் அறிமுகம் செய்யப்பட்ட இளம் பாடகர்கள் மட்டுமே பங்கேற்கும் வித்தியாசமான நிகழ்ச்சி இது. வருகிற பிப்ரவரி 28-ம் தேதி நடக்கிறது.

ரஹ்மான் வந்தபிறகு தமிழ் சினிமாவில் நிறைய இளம் பாடகர்கள் உருவாகியுள்ளனர்.

பாடகர்கள் பென்னி தயாள், ஸ்ரீனிவாஸ், சுரேஷ் பீட்டர்ஸ், நரேஷ் அய்யர், ஹரிசரண், திமோதி மதுகர், சுஜாதா, சுவேதா மோகன், சுவி சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பாடுகிறார்கள்.

3 மணி நேரம் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில், பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி, ஏ.ஆர்.ரஹ்மானின் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X