ராவணன் ட்ரைலர் வெளியீடு!

40 நொடிகள் மட்டும் ஓடும் இந்த அதிகாரப்பூர்வ ட்ரைலர், மலை மீதிருந்து ஐஸ்வர்யா ராயுடன் அபிஷேக் பச்சன் ஆற்றில் குதிப்பது போன்ற காட்சியுடன் தொடங்குகிறது.
இந்தப் படத்தின் இன்னொரு தயாரிப்பாளராக பிக் பிக்சர்ஸ் இணைந்துள்ளது. இந்தி ட்ரைலர் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரைலர்கள் விரைவில் வெளியாக உள்ளன.
வரும் ஏப்ரல் 24-ம் தேதி ராவணன் படத்தின் ஆடியோ வெளியாக உள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் இந்தி ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியோ உரிமையைப் பெற கடும் போட்டி நிலவுகிறது. அநேகமாக சோனி நிறுவனம் இந்த உரிமையைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Comments
abhishek bachan aishwarya rai அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் ட்ரைலர் மணி ரத்னம் ராவணா வெளியீடு manirathnam ravana trailer launch


Click it and Unblock the Notifications