'சபாஷ் சரியான போட்டி'... - ஒரு சூப்பர் ஸ்டாரும் தீவிர ரசிகனும்!

இப்போது மீண்டும் பெரிய திரையில் களமிறங்கியுள்ளார்... வெறும் நடிகராக மட்டுமல்ல, ஒரு இயக்குநராக.
சபாஷ் சரியான போட்டி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், ஒரு சினிமா சூப்பர் ஸ்டாருக்கும் அவரது தீவிர ரசிகனுக்குமான உறவைச் சித்தரிக்கிறதாம்.
சூப்பர் ஸ்டாராக ஜெயராமும், அவரது ரசிகனாக ஸ்ரீராம் கார்த்திக்கும் நடித்துள்ளனர். அஞ்சனா நாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் நடந்தது. கிட்டத்தட்ட சின்னத்திரை உலகமே திரண்டு வந்துவிட்டதைப் போல, எக்கச்சக்க டெலிவிஷன் நட்சத்திரங்கள் குவிந்துவிட்டனர் விழாவில்.
முதல் இசைத் தகடை இயக்குநர் பாலுமகேந்திரா வெளியிட, இயக்குநர்கள் ஆர்கே செல்வமணி, சமுத்திரக்கனி, வெற்றிமாறன் மற்றும் அபிராமி ராமநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
Comments


Click it and Unblock the Notifications