மீண்டும் படமான 'டாக்ஸி'!

கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு இயக்கும் முதல் படம்தான் சக்கரக்கட்டி. பாக்யராஜின் மகன்சாந்தனு இப்படம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட் ஆகிவிட்டன. விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது சக்கரக்கட்டி.
குறிப்பாக டாக்ஸி பாடல் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இதையடுத்து இப்பாடலை தனது புரமோக்களில் பயன்படுத்த தீர்மானித்தது பாடல் உரிமையை வாங்கியுள்ள சோனி பிஎம்ஜி. இதைத் தொடர்ந்து இப்பாடலை மறுபடியும் சென்னை பின்னி மில் வளாகத்தில் வைத்து புது மெருகுடன் படமாக்கியுள்ளார் கலாபிரபு.
இதற்காக மாஸ்கோவிலிருந்து மாடல் அழகிகளை பிரத்யேகமாக வரவழைத்திருந்தனராம். முன்பை விட இப்போது படமாக்கப்பட்டுள்ள பாடல் படு ரிச் ஆக வந்துள்ளதாம். இளசுகளின் மனதை அள்ளும் வகையில் பாடல் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி ஆடியோ ரிலீஸுக்குப் பின்னர் ஒரு பாடலை மாற்றிப் படமாக்குவது இது இரண்டாவது முறை. சமீபத்தில், காதலில் விழுந்தேன் படத்தில் இடம் பெற்றுள்ள மெகா சூப்பர் ஹிட் பாடலான நாக்கு மூக்கா பாடலையும் இப்படித்தான் மாற்றி எடுத்தனர். பாடல் சூப்பர் ஹிட் ஆனதால், ஏற்கனவே படமாக்கிய பாடலை தூக்கி கடாசி விட்டு புத்தும் புது மெருகுடன் மாற்றிப் படமாக்கினர் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











