வளர்ப்பு மகள் கல்யாண தோஷம் நீங்க கொடுமுடியி்ல சரோஜாதேவி பரிகாப பூஜை

By Staff

Saroja Devi and Indira Parameswari
'கன்னடத்துப் பைங்கிளி' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனது வளர்ப்பு மகள் இந்திரா பரமேஸ்வரியின் கல்யாணத் தோஷம் நீங்க ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பரிகார பூஜை நடத்தினார்.

சரோஜாதேவியின் தங்கை ஹேமா. இவரது மகள்தான் இந்திரா பரமேஸ்வரி. இவரை சரோஜா தேவி தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்திரா பரமேஸ்வரிக்கு திருமணத் தோஷம் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து திருமணத் தடை நீங்குவதற்காக கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பரிகார பூஜை நடத்த சரோஜாதேவி முடிவெடுத்தார்.

அதன்படி சரோஜாதேவி, தங்கை ஹேமா, இந்திரா பரமேஸ்வரி ஆகியோர் கார் மூலம் பெங்களூரிலிருந்து கொடுமுடி வந்தனர்.

சரோஜாதேவியை பார்த்ததும் ரசிகர்களும் பக்தர்களும் அவரை நோக்கி உற்சாகமாக கையை அசைத்தனர். பதிலுக்கு புன்னகையுடன் சரோஜாதேவியும் கையசைத்தார்.

சரோஜாதேவியை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரத்தினசபாபதி, செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.

பிறகு கோவிலையொட்டி உள்ள காவிரி ஆற்றில் சரோஜாதேவி, மகள் இந்திரா பரமேஸ்வரி மற்றும் உடன் வந்த உறவினர்கள் புனித நீராடினர். பின்னர் வளர்ப்பு மகளின் திருமண தடை நீக்க பரிகார பூஜை நடந்தது. இதில் சரோஜாதேவி கலந்து கொண்டார்.

ஹோமகுண்டம் வளர்த்து தோஷ பரிகார நிவர்த்தி செய்தார். 3 மணி நேரம் இந்த பூஜை நடந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X