10 பேரையாவது சுட்டிருப்பேன்: சீமான் சீறல்!

அமெரிக்கவாழ் தமிழரான நீலமயில் தண்டபாணி ஸ்டோன்வால் கிரியேஷன்ஸ் சார்பில் 'நெற்றிச்சுட்டி', 'மழைக்கால பறவைகள்' என்று 6 தலைப்புகளில் ஆங்கில வார்த்தை இன்றி 60 தமிழ் பாடல்கள் கொண்ட தொகுப்பைத் தயாரித்துள்ளார்.
இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் சீமான் பேசுகையில்,
அந்த காலத்தில் கருத்துள்ள பாடல்களை கதாநாயகன், தயாரிப்பாளர், இயக்குநர்கள் கேட்டு வாங்குவார்கள். ஆனால் இப்போதோ அர்த்தமற்ற பாடல்களே வருகின்றன. தமிழே பேசத் தெரியாதவர்கள் தமிழ்பாடல் பாடி தமிழைக் கொலை செய்கின்றனர்.
இன்றைக்கு திரை உலகம் மிகவும் கேவலமாகி வருகிறது. நான் சினிமாத் துறையில் நுழையும் போது எவ்வளவோ பரவாயில்லை... நிலைமை இப்படி மோசமாகும் என்று தெரிந்திருந்தால் நான் பட்டாளத்தில் சேர்ந்து பத்து பேரையாவது சுட்டுத் தள்ளியிருப்பேன், என்றார்.
இந்த ஆல்பத்தில் 55 பாடல்களை வாணி ஜெயராம் பாடி உள்ளார். சக்திநாதன் இசையமைத்திருக்கிறார். இவ்விழாவில் இசை அமைப்பாளர் எம்,எஸ் விஸ்வநாதன், சபேஷ் முரளி, ஸ்ரீகாந்த் தேவா, கவிஞர்கள் முத்துலிங்கம், பிறைசூடன், காமகோடியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











