கமல் படத்துக்கு ஸ்ருதி மியூசிக்!

இதுகுறித்து படத்துக்கு நெருங்கிய தரப்பு கூறுகையில், ஸ்ருதி ஹாசன்தான் தலைவன் இருக்கின்றான் படத்திற்கு பின்னணி இசையை வடிவமைக்கப் போகிறார் என்று கூறுகிறது.
நன்றாக பாடக் கூடியவரான ஸ்ருதி நடிக்கப் போவதாக இடையில் செய்திகள் வந்தன. இந்த நிலையில் தனது தந்தையின் படத்துக்கு இசையமைக்கப் போவதாக புதிய செய்தி வந்துள்ளது.
இதுதவிர படத்துக்கான புரமோஷனல் வீடியோவையும் ஸ்ருதியே தயாரிக்கவுள்ளார்.
ராஜ்கமல் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தலைவன் இருக்கின்றான் படத்தைத் தயாரிக்கவுள்ளன. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
முன்னதாக மார்ச் 9ம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் தற்போது படப்பிடிப்புதள்ளிப் போயுள்ளது.
Comments
அறிமுகம் இசையமைப்பாளர் சினிமா தமிழ் தலைவன் இருக்கின்றான் ஸ்ருதி cinema music director shruthi thalaivan irukkindran


Click it and Unblock the Notifications