'சிலந்தி' மோனிகாவின் 'நரன்'!

முன்னணி நாளிதழில் செய்தியாளராக இருந்து இயக்குநரானவர் ஆதி. இயக்கிய முதல் படம் சிலந்தி. சின்ன பட்ஜெட் படம். நல்ல வசூலைப் பெற்றது. தோல்வி அடையாத பட வரிசையில் சேர்ந்ததால் ஆதிக்கும் பெயராகி விட்டது.
இப்போது அடுத்த படத்திற்கு வந்துள்ளார் ஆதி. நரன் என்ற பெயரில் உருவாகும் இதில் இரண்டு நாயகிகள், ஒரு ஹீரோ. அக்னீஷ்வர் என்ற நடன இயக்குநர்தான் ஹீரோவாக நடிக்கிறார்.
நாயகியாக நடிப்பவர் பூர்ணா. இப்போது இன்னொரு நாயகியாக சிலந்தி நாயகி மோனிகாவையும் இழுத்து வந்துள்ளனர். சிலந்தி படத்தில் கவர்ச்சிக் கொட்டி மெழுகியிருந்தார் மோனிகா. இதிலும் அதே போல நடிப்பாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமெடிக்கு சிங்கமுத்து, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இதுவரை வந் திரில்லர் படங்களையெல்லாம் மிஞ்சும் வகையில் நரன் இருக்கும் என்கிறார் இயக்குநர்.
Comments


Click it and Unblock the Notifications