'ஜப் வி மெட்' ரீமேக் 'கண்டேன் காதலை'!

இந்தியில் ஷாஹித் கபூர், கரீனா கபூர் இணையில் வெளியான படம் ஜப் வி மெட். இந்தப் படத்துடன் இருவரும் பிரிந்து போய் விட்டனர் - அது தனிக் கதை.
இந்தப் படத்தை தற்போது தமிழில் கண்ணன், கண்டேன் காதலை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட ஜப் வி மெட் இயக்குநர் இம்தியாஸ் பேசுகையில், நிச்சயம் இப்படம் ஹிட் ஆகும். படத்தில் நான் செய்த தவறுகளை இந்தப் படத்தில் மிகவும் கவனத்துடன் தவிர்த்துள்ளார் கண்ணன்.
எனவே இந்தியைப் போலவே தமிழிலும் இப்படம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
கண்டேன் காதலை படத்தில் பரத், தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். சிலந்தி பட நாயகன் முன்னாவும் படத்தில் இருக்கிறார். கண்ணன் இயக்கியுள்ளார்,வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
Comments
இந்தி இம்தியாஸ் அலி கண்டேன் காதலை கண்ணன் சினிமா ஜப் வி மெட் தமன்னா தமிழ் பரத் barath cinema hindi imtiyaz ali jab we met kanden kadalai kannan tamannah


Click it and Unblock the Notifications