twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திய அழகி மிஸ் தெ. ஆப்பிரிக்கா

    By Staff
    |

    Tatum Keshwar
    ஜோஹன்ஸ்பர்க்: மிஸ் தென் ஆப்பிரிக்கா பட்டத்தை இந்திய வம்சவாளி அழகியான டட்டும் கேஷ்வர் பெற்றுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் சன் சிட்டியில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் டட்டும் கேஷ்வர் இப்பட்டத்தை வென்றார். இவர் ஒரு மாடல் அழகியாவார்.

    சைக்காலஜி படித்துள்ள டட்டுமுக்கு வயது 24. கடந்த 2005ம் ஆண்டும் இவர் மிஸ் தென் ஆப்பிரிக்கா போட்டியில் இருந்தார். ஆனால் அப்போது நழுவிப் போன பட்டத்தை இந்த ஆண்டு கெட்டியாகப் பிடித்து விட்டார் டட்டும்.

    2005ம் ஆண்டின் சிறந்த மாடல் அழகியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர் டட்டும். ஆனால் மிஸ் தென் ஆப்பிரிக்க அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினார்.

    அடுத்த ஆண்டு ஜோஹன்ஸ்பர்க்கில் நடைபெறும் மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில், தென் ஆப்பிரிக்காவின் சார்பில் டட்டும் கலந்து கொள்வார். ஆக, இந்திய அழகிகள் இருவர் அடுத்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில் இடம் பெறப் போவது உறுதியாகி விட்டது.

    சமீபத்தில் முடிந்த மிஸ் வேர்ல்ட் போட்டியின் இறுதிச் சுற்றின்போது டட்டும சான்ட்டான் அரங்குக்கு வந்திருந்தார். இந்திய அழகி பார்வதி ஓமனக்குட்டன் 2வது இடத்தைப் பிடித்ததை ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

    சன் சிட்டி தனக்கு சிறந்த பரிசைக் கொடுத்துள்ளதாகவும், அந்த மறக்க முடியாத நினைவுகளுடன் சொந்த ஊரான டர்பன் திரும்பப் போவதாகவும் கூறினார் டட்டும்.

    அரசியலிலும் டட்டுமுக்கு நல்ல ஆர்வம் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைந்ததும், புதிய அதிபரை தான் சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார் டட்டும்.

    புதிய அதிபரை சந்திக்கும்போது, இளைஞர்களுக்கு அரசியலில் அதிக முக்கியத்துவம், பங்கு அளிக்க வேண்டும் என வற்புறுத்தப் போவதாக கூறுகிறார் டட்டும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X