பழனி மலையில் ரம்யா கிருஷ்ணன், விஜயகுமார், மஞ்சு பார்கவி!

By Shankar

Thangam Mega Serial Team
வேண்டுதலை நிறைவேற்ற பொதுவாக பழனி மலைக்கு போய் மொட்டை போட்டுக் கொள்வார்கள். இந்த வகையில் ஒரு மெகா சீரியல் வெற்றிகரமாகப் போவதைக் கொண்டாட அந்தக் குழுவே பழனிக்குப் போய் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளது.

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் தங்கம் மெகாத்தொடர் 500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றியை கொண்டாடவும், டிஆர்பி ரேட்டிங்கில் பெரும்பாலும் தங்கள் தொடரை முதல் இடத்தில் வைத்திருக்கும் 'பழனிமலை முருகனுக்கு' நன்றி சொல்லும் விதமாகவும், தங்கம் குடும்பத்தை சேர்ந்த ரம்யா கிருஷ்ணன், விஜயகுமார், சீமா, மஞ்சு பார்கவி, ஜிகே, அனுராதா, காவேரி, வர்ஷா, மற்றும் பலர் ஒன்று கூடி கடந்த வாரம் பழனிக்கு சென்று சுப்ரமணிசுவாமியை தரிசித்து வந்தனர்.

இதை பற்றி இணை தயாரிப்பாளர் வினயா கிருஷ்ணன் கூறுகையில், "நாங்கள் இந்த இரண்டு வருடங்களில் ஒரு கூட்டு குடும்பமாகவே ஆகிவிட்டோம். ஆகவேதான் எங்கள் குடும்பத்துடன் பழனிக்கு சென்று வந்தோம். சீரியல் குடும்பத்தில் என்ன பகை நடந்தாலும் நிஜமான நிகழ்வில் அந்த பகைக்கு இடமில்லை. எப்போதும் எங்கள் குழுவினரிடம் 'ஒற்றுமை", 'நிம்மதி", 'சந்தோஷ'ந்தான் பிரதிபளிக்கும். தங்கம் தொடருக்காக ஒவ்வொருவரின் தனிபட்ட ஈடுபாடும் உழைப்பும் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுகிறது. அது தான் 'தங்கம்" குடும்பத்தின் பலம்", என்கிறார் வினயா கிருஷ்ணன்.

ஒற்றுமை, நிம்மதி, சந்தோஷம்.... ம்ம்... அடுத்தடுத்த மெகா சீரியல்களுக்கான தலைப்பு ரெடி போலிருக்கே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X