அமெரிக்காவில் காவலன் ட்ரெயிலர் வெளியிடும் விஜய்!
தனது காவலன் படத்தின் ட்ரெயிலரை அமெரிக்காவில் இன்று வெளியிடுகிறார் நடிகர் விஜய்.
காவலன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக இப்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் விஜய்.
சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள அவருக்கு, பே ஏரியா பகுதியில் சிறப்பான வரவேற்பு தர ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்தியா கம்யூனிட்டி சென்டரில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த ட்ரெயிலரை வெளியிடுகிறார் விஜய்.
விஜய் படத்துக்கு அமெரிக்காவில் ட்ரெயிலர் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. புலம் பெயர் தமிழர் மத்தியில் இந்தப் படம் குறித்து உருவாகியுள்ள அதிருப்தியைப் போக்குவதற்கும் இந்தப் பயணத்தை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார் விஜய்.
பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது காவலன்.
Comments


Click it and Unblock the Notifications