பிரமாண்ட விருதகிரி பட இசை வெளியீடு-விஜயகாந்த் திட்டம்!

சென்னை வர்த்தக மையத்தில் வரும் நவம்பர் 22-ம் தேதி இந்த விழா நடக்கிறது.
இந்த விழாவில் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று விஜய்காந்தின் மைத்துனர் எல்கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தல் 2011-க்கு விஜய்காந்தின் தேர்தல் பிரச்சார ஆயுதமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
விருதகிரியில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜயகாந்த். படத்தின் தலைப்பு, விஜயகாந்த் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில் உள்ள விருதகிரீஸ்வரர் கோயில் மூலவரைக் குறிப்பதாகவும், விருதாச்சலம் மக்களைப் பெருமைப்படுத்தவே இந்தத் தலைப்பு சூட்டியதாவும் விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications