இன்று 4 புதிய படங்கள் வெளியீடு!!
ஏப்ரல் வரையிலான இந்த சீஸனில் அதிக படங்கள் வெளியாகும் கடைசி தினம் அநேகமாக இந்த வெள்ளிக்கிழமைதான் எனலாம்.
நாளை உலகக் கோப்பைப் போட்டிகள் துவங்கவிருக்கும் நிலையில், இன்று மட்டும் 4 புதிய படங்கள் வெளியாகின்றன.
கவுதம் மேனனின் நடுநிசி நாய்கள், ஆதி நடித்துள்ள ஆடு புலி, ஏ எம் ஆர் ரமேஷ் இயக்கியுள்ள காதலர் குடியிருப்பு மற்றும் புதுமுகங்கள் நடித்த மார்கழி 16 ஆகிய படங்கள் இன்று திரையரங்குகளைத் தொட்டுள்ளன.
விஷால் பரத்வாஜின் 7 கூன் மாபியா, ராம்கோபால் வர்மாவின் ஒரு தெலுங்குப் படம் மற்றும் இரு ஆங்கிலப்படங்களும் இன்று வெளியாகின்றன.
இந்த நான்கு படங்களுக்குமே பெரிய ஓப்பனிங் என்று சொல்ல முடியாது. இவற்றில் ஆடு புலி மட்டுமே பொழுதுபோக்குப் படமாக வருகிறது. மற்றவற்றில் ஒன்று சைக்கோ படம். இன்னொன்று பாபர் மசூதி கலவரப் பின்னணியில் வந்துள்ள படம்.
புத்தாண்டு பிறந்ததிலிருந்தே வெறிச்சோடிக் கிடக்கும் கோடம்பாக்கம் பாக்ஸ் ஆபீஸ், இந்தப் படங்களால் நிறையுமா? தெரியவில்லை.
இதற்கிடையே நாளை இந்தியா - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதனால் இந்தப் படங்களை ரசிகர்கள் கண்டுகொள்வார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அதற்கேற்ப, பல திரையரங்குகள் உலகக் கோப்பையையொட்டி காட்சி நேரங்களை நான்கிலிருந்து இரண்டாகக் குறைத்துவிட்டதாக அறிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











