பிரியங்கா-ஷாஹித் காதல் 'கன்பர்ம்ட்'!

இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக அரசல் புரசலாக செய்திகள் வந்தன. அதை இருவருமே திட்டவட்டமாக மறுத்தனர். அதெல்லாம் சும்மா வதந்தி என்றனர்.
ஆனால் இருவரும் யாருக்கும் தெரியாமல் 'கேன்டில் லைட்' டின்னர்களுக்குப் போகிறர்கள், நீண்ட நேரம் இருளான இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதை இருவரும் மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் பகிரங்கமான முறையில் தங்களது காதலை பொது இடத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர் பிரியங்காவும், ஷாஹித் கபூரும். நடந்த இடம் மும்பை சர்வதேச விமான நிலையம்.
கட்ரோன் கி கிலாடியில் நடிப்பதற்காக பிரேசிலுக்கு சென்றுள்ளார் பிரியங்கா. இதையடுத்து அவர் அதிகாலை 2 மணியளவில் மும்பை விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். அவரை டிராப் செய்தது ஷாஹித் கபூர்தான். அவரது கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் காரில் பிரியங்காவை அழைத்து வந்தார்.
இந்த 'சம்பவத்தை' நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் காரில் அதிகாலை 2 மணிக்கு இருவரும் வந்திறங்கினர். பிரியங்கா போக வேண்டிய டெர்மினல் ஏ. ஆனால் பிரியங்கா வருவது அறிந்து அப்பகுதியில் பத்திரிக்கையாளர்கள் கூடி நின்றதால் (காலங்காத்தாலேயே போய்ட்டீங்களாப்பா!) காரை பி டெர்மினலுக்கு விட்டார் ஷாஹித்.
அங்கு காரை நிறுத்திய பின்னர் வேகமாக கீழே இறங்கினார் பிரியங்கா. பின்னர் ஷாஹித்துக்கு ஒரு முத்தம் கொடுத்தார், பதிலுக்கு அவரும் கொடுத்தார். பின்னர் வேகமாக அங்கிருந்து ஏ டெர்மினலுக்கு ஓடினார் என்றார்கள்.
பிரேசிலில் ஒரு மாதம் டேரா போடுகிறாராம் பிரியங்கா. ஒரு வேளை வந்த பிறகு காதலைச் சொல்லத் திட்டமிட்டுள்ளாரோ என்னவோ?


Click it and Unblock the Notifications











