இயக்குநராகும் ஐஸ்வர்யா தனுஷ்!

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஐஸ்வர்யா தனுஷ்.
இப்போது தானே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குவதற்குத் தயாராக உள்ளார்.
திரைக்கதை முழுமையாக உருவாக்கப்பட்டுவிட்டதாம். கணவர் தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவன் ஆகியோரிடமும் ஸ்கிரிப்டைக் காட்டி பாராட்டுப் பெற்ற ஐஸ்வர்யா, அடுத்து படத்தின் தலைப்பு, கலைஞர்கள் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்யவிருக்கிறார்.
தனது பிரசவம் மற்றும் தங்கை ஐஸ்வர்யாவின் திருமணம் மற்றும முடிந்த பிறகே படப்பிடிப்பைத் தொடங்க உள்ளார்.
காமெடி கலந்த காதல் கதையாம் இந்தப் படம்.
'இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க மாட்டார், வேறு நடிகர்களையே நடிக்க வைப்பேன்' என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.
Comments


Click it and Unblock the Notifications