ஒருவழியாக சம்மதித்த ஐஸ்வர்யா ராய்!

தமிழில் அறிமுகமாகி,பெரிய பட்ஜெட் தமிழ்ப் படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய் இதுவரை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாமல் இருந்தார்.
எனவே ஐஸ்வர்யாராய் உடனடியாக உறுப்பினராக வேண்டும். இல்லாவிட்டால் எந்த ஒத்துழைப்பும் வழங்கப்பட மாட்டாது என என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி ஏற்கனவே கூறியிருந்தார்.
இதனை ஐஸ்வர்யா ராய் ஏற்றுக் கொண்டுள்ளார். நடிகர் சங்கத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை மும்பைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதை பூர்த்தி செய்து சென்னை வரும் போது நடிகர் சங்கத்தில் ஒப்படைப்பதாக உறுதி அளித்துள்ளார்.
புதுமுக நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று ஏற்கனவே கெடு விதிக்கப்பட்டது. இதையடுத்து 32 பேர் புதிதாக உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.
இன்னும் உறுப்பினராகாதவர்கள் பெயர் பட்டியல் தயாராகி வருகிறது. அவர்களுக்கு இனி வரும் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











