முதல்வர் மகாத்மா படத்தில் அனுபம் கெர்!

இந்த ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு முதல்வர் மகாத்மா எனும் பெயரில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார்கள். ஆனால் இது இன்று நேற்று ஆரம்பித்த படமல்ல... கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கும் படம்.
முழுக்க காந்தியின் சிந்தனை, காந்திய வழிமுறைகள் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போதுதான் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
இதில் பிரபல இந்தி நடிகர் அனுபம் கேர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் படமாக்கப்பட்டன. கதையின் கருவும். திரைக்கதையும் அனுபம் கேருக்கு பிடித்து போனதால் இதில் நடிக்க சம்மதித்தாராம். முதல்வர் பாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
காந்தியின் கொள்கைகளை தனது மாநிலத்தில் செயல்படுத்தி மக்கள் ஆதரவை பெறுவது போல் அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டு உள்ளது. அவருடன் மும்பை நடிகை மான்வி பத்திரிகையாளர் வேடத்தில் வருகிறார்.
இந்த படத்தை இந்தி ஆங்கிலத்திலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தில் காந்தியாக கனகராஜ் நடிக்கிறார்.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ.பாலகிருஷ்ணன் இப்படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார். பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை உருவாக்கியவர் இவர்.
ரவி மற்றும் காமராஜ் ஆகியோரின் இணை தயாரிப்பில் மோகன் ஒளப்பதிவு செய்கிறார்.


Click it and Unblock the Notifications











