அடுக்குமாடி குடியிருப்புகளாகும் ஏவிஎம் வளாகம்!

இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையின் மையப் பகுதியில், தமிழ் சினிமாவின் தலைமையிடமான வடபழனியில் அமைந்துள்ளது பிரமாண்டமான ஏவிஎம் ஸ்டுடியோ. ஏவி மெய்யப்பச் செட்டியாரால் நிறுவப்பட்ட இந்த ஸ்டுடியோ, இப்போது அவரது வாரிசுகளால் பாகப்பிரிவினை செய்யப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இப்போது இந்த ஸ்டுடியோவின் முன்பகுதியில் பெரிய அடுக்குமாடி வர்த்தக வளாகம் கட்டப்பட்டுள்ளது. அடுத்து ஸ்டுடியோவின் லக்கி பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமுள்ள பகுதி முழுவதிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் எழுப்பப்பட உள்ளது.
இதற்காக பிரபல கட்டுமான நிறுவனத்துடன் ஏவிஎம் நிர்வாகிகள் ஒப்பந்தம் .
ஏற்கெனவே சென்னையில் இருந்த பிரபல ஸ்டியோக்கள் அனைத்தும் குடோன்களாக, குடியிருப்பு வளாகமாக, கல்வி நிறுவனங்களாக மாற்றப்பட்டுவிட்டன. இப்போது மிச்சமிருப்பது பிரசாத் ஸ்டுடியோ மற்றும் லேப் வளாகங்கள் மட்டுமே.


Click it and Unblock the Notifications











